பாரதீய ஜனதா ஆட்சியினால் நாம் பெருமையாக கருதும் ஜனநாயகம் கொல்லப்பட்டு வருகிறது

Irudhi Suttru Team Thanked All for Success

சமூக வலைத்தளமான டுவிட்டரில் அடிக்கடி கருத்துகள் வெளியிட்டு அரசியல் களத்தை பரபரப்பாக்கி வந்த நடிகை குஷ்பு, சில வாரங்களுக்கு முன்பு டுவிட்டரில் இருந்து திடீரென்று விலகினார். ஆனாலும் தனது டுவிட்டர் தளத்தை நீக்காமலேயே வைத்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் டுவிட்டருக்கு திரும்பி மத்திய-மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு உள்ளார். டுவிட்டரில் குஷ்பு கூறியிருப்பதாவது:-

“பாரதீய ஜனதா ஆட்சியினால் நாம் பெருமையாக கருதும் ஜனநாயகம் கொல்லப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் எனது கருத்துக்களை நான் வெளியிடாமல் இருந்தால் இந்திய குடிமகளாக இருக்கவே அருகதை இல்லை. கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டு இருக்கிறார். குண்டுகளால் குரல்களை ஒடுக்கலாம். ஆனால் இந்தியாவை காவிமயமாக்க நினைப்பவர்களுக்கு எதிரான சிந்தனைகளை ஒடுக்க முடியாது.இந்த படுகொலையானது தகுதி இல்லாத பிரதமரை பொறுத்துக் கொண்டவர்களுக்கு கன்னத்தில் விழுந்த அறை போன்றது ஆகும்.

தமிழகத்தில் அனிதாவின் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவையெல்லாம் பாரதீய ஜனதா கட்சி தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் என்பதை சுட்டிக்காட்டும் உண்மைகள்.இதுபோல் இன்னும் எத்தனை கொலைகளையும், தற்கொலைகளையும் இந்த அரசு பார்க்கப்போகிறது? நான் மத்திய,

மாநில அரசுகளுக்கு எதிராக பேசுவதால் எனக்கு சகிப்பு தன்மை இல்லை என்பார்கள். ஆமாம் எனக்கு சகிப்பு தன்மை இல்லைதான். இதுபோன்ற கொலை சம்பவங்களை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது. மத்தியில் முதுகெலும்பு இல்லாதவர்கள் சிலர் இருக்கிறார்கள். தமிழகத்திலும் பாரதீய ஜனதாவுக்கும் மோடிக்கும் அடிபணிந்து நிற்கும் சுயமரியாதை இல்லாதவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை காப்பாற்ற நாம் அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.பெரும்பான்மை இல்லை.

ஆனாலும் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இருக்கிறார்கள். அதிகார வெறியோடு துணை பொதுச்செயலாளரும் இருக்கிறார். இவர்களுக்கு ஓட்டு போட்டது யார்? நம் நாடு வீழ்ச்சியுறுவதை தொலைவில் நின்று வேடிக்கை பார்க்கிறோம். இது நமது நாடு. நமது இந்தியா. நம்முடையை பெருமை. இந்த நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும்.மோடியின் கட்டளைப்படி ஈ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும் ஒருவருக்கொருவர்

கைகுலுக்கி கொண்டு இருந்த நேரத்தில்தான் அனிதா வாழ்வின் இறுதி முடிவை எடுத்தார். நம் அனைவருக்குள்ளும் கவுரி லங்கேசும், வளர்மதியும் இருக்கிறார்கள். துப்பாக்கி குண்டுகளோ குண்டர் சட்டமோ நம்மை தடுக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறும்வரை போராடுவோம்.”