போராட்டத்தை கைவிட்டால் அரசிடம் பேச்சுவார்த்தை, ஜாக்டோ-ஜியோவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றமும், மதுரைக்கிளையும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. நேற்று சென்னை உயர்நீதிமன்றம், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது என கூறியிருந்தது.  இந்நிலையில் இன்று ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறுகையில், “எந்த நிபந்தனையும் இல்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்களும், பொதுமக்களின் நலன் கருதி அரசு ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு செய்தால் வரும் திங்கட்கிழமை(அக்.18) அன்று தலைமை செயலாளரை அழைத்து இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும்” என தெரிவித்துள்ளனர்.