இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைபயண இயக்கம் தொடக்கம்

தீப்பெட்டி, கடலைமிட்டாய், பட்டாசுக்கான ஜீ.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும், மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்,சிலிண்டர் மானியத்தினை ரத்து செய்ய கூடாது, வீடு இல்லாத மக்களுக்கு வீடு வழங்க வேண்டும், அரசு புறம் போக்கு நிலத்தில் வீடு கட்டி இருப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்புதிட்டத்தினை நகர் பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நிபந்தனையின்றி வழங்க வேண்டும்,
 
கோவில்பட்டி 2வது கூட்டு குடிநீர் திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற வேண்டும், அரசு மருத்துவமனைக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் இன்று முதல் வரும் 10ந்தேதி வரையிலான நடைபயண இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அக்கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸட் கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன நடைபயண இயகத்தினை தொடங்கி வைத்தார். 10நாள்களும் நகர் முழுவதும் பயணம் செய்து தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்துகின்றனர். இதில் நகர செயலாளர் பரமராஜ், சரோஜா, செந்தில் ஆறுமுகம் உள்பட திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.