ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு வண்டி ஓட்டி வருகிறார்கள், நாயகன் வெற்றியும், சவுந்தர்ராஜாவும். வெற்றி தன்னுடைய பெரியப்பாவான நரேனின் வண்டியில் டிரைவராக பணியாற்றுகிறார். சவுந்தர்ராஜா தன்னுடைய சொந்த வண்டியை ஓட்டி வருகிறார். மார்க்கெட்டுக்கு யார் முதலில் காய்கறி கொண்டு போகிறார்கள் என்பதில் இருவருக்குள்ளும் ஒரு போட்டி இருக்கிறது. இதனால் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே வலம் வருகிறார்கள். இந்நிலையில், சவுந்தர்ராஜாவின் தங்கையான நாயகி அதிதியை பார்த்ததும் நாயகனுக்கு பிடித்துப்போய் விடுகிறது.
பிறகு, அவள் சவுந்தர்ராஜாவின் தங்கை என்பது வெற்றிக்கு தெரிந்ததும் அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துகிறார். பின்னர், ஒரு சந்திப்பில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர் அந்த மோதல் மெல்ல மெல்ல காதலாக உருவாகிறது.
அதேஊரில் பெரும் குடிகாரனாக இருககும் மொட்டை ராஜேந்திரனுக்கும், சவுந்தர்ராஜாவுக்கும் ஒரு பகை இருக்கிறது. அந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு ஒருநாள் மொட்டை ராஜேந்திரன் சவுந்தர்ராஜாவின் வேன் கண்ணாடியை உடைத்துவிடுகிறார். இதை வெற்றிதான் செய்திருப்பான் என்று நினைக்கிறார் சவுந்தர்ராஜா. ஏற்கெனவே அவன்மீது இந்த சம்பவத்தால் கொலை வெறியாக மாறுகிறது.
இது வெற்றியின் பெரியப்பாவான நரேனுக்கு தெரியவர, வெற்றியை காப்பாற்றுவதற்காக அவனை வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அதேநேரத்தில், சவுந்தர்ராஜாவுக்கும் வெற்றிக்கும் இருக்கும் பகையை போக்குவதற்காக அவனது குடும்பத்தில் சம்பந்தம் செய்ய நரேன் முடிவு செய்கிறார். அதன்படி, தன்னுடைய மகனுக்கு சவுந்தர்ராஜாவின் தங்கையான அதிதியை நிச்சயம் செய்கிறார் நரேன். இது நாயகனான வெற்றிக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு, வெற்றி என்ன முடிவெடுத்தார்? இவர்களது காதல் என்ன ஆனது? சவுந்தர்ராஜா-வெற்றியின் பகை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்