“மோகினி” படத்தின் கதையை கூறியதற்கும் இறுதியாக படத்தை பார்க்கும்போது 10 மடங்கு சிறப்பாக வந்துள்ளது. – தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார்

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு வணக்கம், என் பெயர் லக்ஷ்மன் குமார்ப்ரின்ஸ் பிக்சரின் உரிமையாளர் சிங்கம் 2 தயாரிப்பிர்க்கு பிறகு தற்போதுமோகினிபடத்தை தயாரிக்கின்றோம். படத்தின் post production வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. Censor –க்கு தயாராக உள்ளது.மோகினி திரைப்படம் பிப்ரவரியில் படம் வெளியாகும். மோகினி படத்தின் கதையை மாதேஷ் சார் என்னிடம் கூறும்போது போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக “Horror” படங்களுக்கு வரவேற்பு கிடைகின்றது. அதுமட்டும் இல்லாமல் ஒரு வீட்டினுள் அல்லது ஒரு சிறிய இடத்தினுள் மட்டுமே நகரும் கதைகளம் கிடையாது. இக்கதை லண்டனில் நடக்கும் நிகழ்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிக பெரிய காட்சியமைப்புகள் படத்தில் உள்ளது. படத்தில் 55 நிமிடங்கள் வரும் காட்சிகளில் Visual Effects மிக அருமையாக வந்துள்ளது. த்ரிஷா இப்படத்தின் கதாநாயகியாக உள்ளது மிக பெரிய பலம் மிகப்பெரிய கதாநாயகிகளில் த்ரிஷாவும் ஒருவர்.

இப்படத்தின் கதை முழுவதுமே த்ரிஷாவை மையமாக கொண்டே நகரும். படத்தில் பணிபுரிந்த யோகி பாபு மற்றும் சுவாமி நாதனின் காமெடி சிறப்பாக அமைந்துள்ளது மற்றும் அணைத்து கலைஞர்களும் தங்கள் பணிகளை மிக சிறப்பாக செய்து முடித்துள்ளனர். படத்தின் கதையை என்னிடம் கூறியதற்கும் இறுதியாக படத்தை பார்க்கும்போது 10 மடங்கு சிறப்பாக வந்துள்ளது. அதை நாம் டிரைலரிலே பாத்திருப்போம். ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.