நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு துரோகம் தமிழிசை

 

தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி தாள் ஒன்றின் புகைப்படத்தை தமிழிசை பகிர்ந்திருந்தார். அதில், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு செய்த துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என மு.க ஸ்டாலின் கூறியிருந்தது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்ணை பெற்று தமிழக அரசியல்வாதிகளின் மூக்கை உடைத்திருப்பதாக கேள்வி.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில் பல வருடங்களாக மாநில பாடத்திட்டத்தில் படித்த 25-30 மாணவ மாணவிகளே இடம் பெற்றிருந்தனர்.

இந்த வருடம் நீட் தேர்வில் 600-700 பேர் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்வார்கள். மத்திய மாநில அரசியல்வாதிகள் அவரவர் சுயநலத்திற்கு ஏற்ப நாடகம் ஆடினாலும், திரை விலகி உண்மை வெளிப்பட்டு, யார் துரோகி என்பது தெளிவாகி விட்டது என அந்த செய்திதாள் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பகிர்ந்திருந்த தமிழிசை, மேற்கோளாக, நன்றி தமிழக அரசியல் வார இதழ்…..தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைத்தது யார்? என அடையாளம் காட்டியமைக்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.