என்ஜிகே, சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு தரும் சர்ப்ரைஸ்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ‘என்ஜிகே’ படத்தல் நடித்து வருகிறார். வருகிற தீபாவளிக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது படக்குழு.

இந்நிலையில், ஜூலை 23-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக படத்தின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜூலை 23-ல் நடிகர் சூர்யா அவரது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், அன்று சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங், ஜெகபதிபாபு, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.