சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – மிரட்டும் சோஷியோ ஃபேண்டஸி உலகம்!

‘ஷம்பாலா’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் யுகேந்தர் முனி இயக்கத்தில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’. ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டரைத் தொடர்ந்து, தற்போது ‘கரிகாலா’ படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளன. இதில் வாளுடன் குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனும், அவருடன் கம்பீரமாக கர்ஜிக்கும் சிங்கமும் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர் படத்தின் பிரம்மாண்டமான கற்பனை உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இப்படம், ‘சந்தமாமா’ கதைகளின் மாய உலகத்திலிருந்து உத்வேகம் பெற்று உருவாகி வருகிறது. மந்திர சக்திகள், வீரர்கள், மறக்கப்பட்ட ராஜ்ஜியங்கள் மற்றும் புராணக் கதைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து இப்படம் உருவாக்கப்பட உள்ளது.

படத்தில் இதுவரை காணாத வித்தியாசமான தோற்றத்தில் சக்திவாய்ந்த போர்வீரராக சந்தீப் கிஷன் நடிக்கிறார். அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ், பிரம்மாண்டமான தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருகிறது.

இரண்டு பாகங்களாக வெளியாகும் ‘கரிகாலா’ படத்தின் முதல் பாகம் 2027 ஜூலை 2-ம் தேதியும், இரண்டாம் பாகம் 2027 அக்டோபர் 28-ம் தேதியும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – யுகேந்தர் முனி

ஒளிப்பதிவு – பிரவீன் பங்காரி

இசை – ஸ்ரீசரண் பாகலா

படத்தொகுப்பு – ஸ்ரவண் கட்டிகனேனி

தயாரிப்பு வடிவமைப்பு – ராம்சரண் தேஜ் லபானி

ஆக்‌ஷன் – ராஜ்குமார் சிந்தலா

ஆடை வடிவமைப்பு – ஆயிஷா மரியம்

தயாரிப்பாளர்கள் – ராஜசேகர் அன்னபிமோஜு, மகிதர் ரெட்டி

தயாரிப்பு நிறுவனம் – ஷைனிங் பிக்சர்ஸ்