மாணவர்களுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி, திரையரங்கில் இளநீர் விற்பனை


நம்முடைய நாட்டின் நிலத்தடி நீரை உறிஞ்சி அதில் கலர்ப்பொடிகளையும்  சர்க்கரையும் கொஞ்சம் விஷத்தையும் கலந்து பெரும் லாபத்துடன் கொள்ளை அடித்து வந்த வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தடை செய்ய வேண்டும் என்கிற நோக்கம். இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இதற்கான விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தினர். இதன் காரணமாக பல இடங்களில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை குறைந்துள்ளது. கடலூரில் உள்ள ஒரு திரையரங்கு உரிமையாளர் வெறும் பேச்சாக இல்லாமல் தனது திரையரங்கில் முற்றிலும் வெளிநாட்டு பானங்களை தவிர்த்துவிட்டு, நம்முடைய கலாச்சார பானமான இளநீர் மற்றும் மோர் ஆகியவற்றை விற்பனை செய்யும்  செயலில் இறங்கியுள்ளார். இதுபற்றி அந்த திரையரங்க உரிமையாளர் கூறும்போது, ஒவ்வொரு விவசாயிக்கும் இதன் பிரதிபலன் சென்று அடையும். பொதுமக்கள் இதற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் நம் நாட்டு விவசாயிகள் அனைவரும் பலன் அடைவர். விவசாயம் மேலும் அதிகரிக்கும்’ என்று கூறினார்.

இதேபோன்று தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெளிநாட்டு பானங்களை தவிர்த்து இளநீர், மோர், போன்ற பானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகவும் இது கருதப்படும் என கூறியுள்ளார்.