முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவன் சூர்யா சமீபத்தில் ஏழு இளம் விஞ்ஞனிகள் கொண்ட மாணவர் குழுவுடன் இணைந்து கலாம் சாட் 3D என்ற மிகக் குறைந்த எடையுள்ள 64 கிராம் மட்டுமே கொண்ட சிறிய ரக செயற்கை கோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தியது. இதில் தாவரவியலில் தனியிடம் பெற்ற வேலம்மாள் பள்ளி மாணவன் இந்த செயற்கைகோளில் ஒரு துளசி செடியை வைத்து விண்வெளியில் தாவரங்கள் வாழ வகையுண்டா என்பதை அறிய முயற்சி செய்திருந்தார். பள்ளி மாணவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்கள் தெரிவித்து ரூபாய் பத்து லட்சம் காசோலையை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளார்.