சென்னையில் கைது செய்யப்பட்டவர்களில் 21 பேரும், இதர மாவட்டங்களில் 15 பேரும் மாணவர்கள். கைதான 487 பேரில் 36 பேர் மாணவர்கள் அவர்களது எதிர்கால நலன் கருதி அவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சட்டசபையில் 110 வது விதியின் கீழ் ஓபிஎஸ் அறிவித்தார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இம்மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.