“வாழும் மாமேதை” “இளம்சாதனையாளர்கள்” விருதுகள்

“ஆடிங் ஸ்மைல்ஸ்” நிறுவனத்தின் சார்பில் “வாழும் மாமேதை சாதனையாளர்கள்  விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது.  இதில் நடிகர் சிவ கார்த்திகேயன், சுதா ரகுநாதன் உள்பட 12 பேருக்கு வழங்கப்பட்டது. ஆடிங் ஸ்மைல்ஸ் ,நிறுவனம் பல்வேறு சிறப்பு  மிகு விழாக்களை நடத்தி வருகிறது. கடந்தாண்டு  “அம்பாசிட்டர் விருது வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியது.

அதே போன்று  இந்தாண்டு  “வாழும் மாமேதை” “இளம் சாதனையாளர்கள்” விருதுகள் வழங்கும் விழா (30-1-17) அன்று சென்னை ஐ. டீ. சி. கிராண்ட் சோழா ஒட்டலில் நடந்தது.  விழாவில் “ஆடிங் ஸ்மைல்ஸ்” நிறுவனத்தின் தலைவர் கவிப்பிரியா மற்றும் பிரசன்னா, விருத்தாளர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போத்தி, பூங்கொத்து கொடுத்து கௌரவித்தனர். விழாவிற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் சேசசாய், மலேசியா நாட்டின் தொழிலதிபர் ஏ.கே நாதன் தலைமை வகித்தனர். இந்த விழாவில் மலேசிய நாட்டைச் சேர்ந்த லிம்காக்விங் மகள்  “டிம்பினி, சத்தியபாமா கல்லூரி மரிய ஜீனா ஜான்சன், பத்மபூஷன் விருது பெற்ற என். விட்டல், கர்னாடக இசை கலைஞர் சுதா ரகுநாதன், கவிக்கோ அப்துல் ரஹமான், பிஜி நாட்டைச் சேர்ந்த வினோத் சந்திர பட்டேல், துபாயைச் சேர்ந்த வாசு தேவ்  சம்தாஸ் செரப், கத்தாரைச் சேர்ந்த  “தோஹா பேங்க் சீதாராமன்,  நடிகர் சிவ கார்த்திகேயன்,  தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுசில் குமார் செரப்,  ஓட்ட பந்தையத்தில் ஆசிய அளவில் பதக்கம் வென்ற சாந்தி சவுந்திரராஜன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இந்திய தேர்தல் ஆனையத்தின் முன்னாள் தலைவர் டி. எஸ். கிருஷ்னமூர்த்தி, பொவொண்டோ நிறுவனத்தின் இயக்குனர் தனுஷ்கோடி,  தொழில் அதிபர் செல்வகுமார், மூத்த பத்திரிக்கையாளர் ஆர். நூருல்லா ஆகியோர் கௌரவ மிக்கவர்களாக சிறப்பிக்கப்பட்டனர். இந்த விழாவில் உலகளாவிய முதலீட்டை தென் இந்திய மாநிலங்கள் ஈர்க்கும் வகையில் “ஆடிங் ஸ்மைல்ஸ்”  நிறுவனம் சார்பில் ஜூலை மாதம் நடத்த இருக்கும் முதலீட்டார்கள் மாநாட்டை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டத்து.  விழாவின் ஏற்பாடுகளை  ” தி 19 – ஈவென்ட்ஸ் & பீ ஆர், சிறப்பாக செய்தது. முன்னதாக  அந்நிறுவனத்தின் தலைவர் திரு. பிரசன்னா அவர்கள்  அனைவரையும் வரவேற்று பேசினார்.