தனது முகநூலில் ஸ்டாலின் பதிவிட்டுள்ள செய்தியில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை நிலைநாட்டி, மதச்சார்பற்ற தன்மை உள்ளிட்ட இத்திருநாட்டின் பன்முகத்தன்மையை போற்றிப்பாதுகாப்பதில் உறுதியாக இருப்பார் என்று மனதார நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.