ஸ்ரீ அங்கலபரமேஸ்வரி அம்மன் மயானகொள்ளை திருவிழா

காட்பாடிஅருகே திருமணி கிராமம்  ஸ்ரீ அங்கலபரமேஸ்வரி அம்மன் மயானகொள்ளை திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா சீரிப்பாய்ந்த காளைகள்   பரிசுகளை தட்டி சென்றது.
 
வேலூர்மாவட்டம் காட்பாடி   திருமணி கிராமத்தில் 84ஆம் ஆண்டு ஸ்ரீ அங்கலபரமேஸ்வரி  திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வெகு சிறப்பாக கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 க்கு மேற்ப்பட்ட காளைகள் கலந்துகொண்டது. ஒரு காளைக்கு இரண்டு சுற்றுகள் நடைபெற்றது. அதில் குறைந்த நிமிடத்தில் வந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.5௦.000 இரண்டாவது பரிசாக  ரூ.40.000 என 20 பரிசுகள் கொடுக்கப்பட்டது. முழு போலிஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு சீரிபாய்ந்த காளைகளால் 10பேருக்கு லேசான  காயங்கள் ஏற்பட்டது.