ஓவியா, சிம்பு இணையும் ’90 எம்.எல்’

நடிகை ஓவியா, சிம்பு பற்றி பல்வேறு வதந்திகள் வருகின்றன. இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்றும் செய்திகள் வந்தது. இச்சமயத்தில் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். அந்த படத்திற்கு ’90எம்.எல்.’ என பெயரிட்டுள்ளனர். ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சிம்பு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  தற்போது வெளிவந்துள்ளது.