மூத்த இந்தி நடிகர் திலீப் குமார் சில தினங்களுக்கு முன்பு நீரிழப்புக் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பியுள்ளார். 94 வயதாகும் திலீப் குமார் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. அவரைப் பாலிவுட் திரை உலகில் இருந்து முதன்முறையாக நடிகர் ஷாரூக் கான் சென்று சந்தித்துள்ளார். சந்திப்பு படங்களும் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஷாரூக் கான், திரை உலகின் சின்னமாக (icon) இருக்கிறார் என்று சொல்வது கூட அவர் புகழுக்கு முன்பு மிகச்சிறிய வார்த்தைதான். திரையுலகின் பிதாமகனாக, தூணாக இருக்கிறார். நல்ல நடிகர் என்பதைத் தாண்டி, நல்ல மனிதர் அவர். அவரைத் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்” என்றார்.