மலைவாழ் பழங்குடியின முதியவரான கோவை சரளா, தனது பேத்தி செம்பியுடன் கொடைக்கானல் பகுதியில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இல்லாத தனது பேத்தியை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக, தேன் எடுப்பது உள்ளிட்ட கஷ்டமான வேலைகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமி செம்பிக்கு நடக்கும் கொடூரமான சம்பவத்தால், கோவை சரளாவின் கனவு சிதைந்து போகிறது. துணையாக நிற்கவேண்டிய காவல்துறை அவர்களையே குற்றவாளியாக சித்தரித்து துரத்த, மறுபக்கம் அரசியல்வாதிகள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கோவை சரளாவும், செம்பியும் தப்பித்தார்களா? இல்லையா? செம்பிக்கு நடந்த கொடுமைக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதே ‘செம்பி’ படத்தோட மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
கோவை சரளா, அஷ்வின்குமார் லட்சுமிகாந்தன், தம்பி ராமையா, நிலா, ஆகாஷ், நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, பாரதி கண்ணன், ஆண்ட்ருஸ் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு – டிரைடென்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர். எண்டர்டெயின்மெண்ட்ஸ் – அஜ்மல் கான், ரியா
இயக்கம் – பிரபு சாலமன்
இசை – நிவாஸ் கே.பிரசன்னா
எடிட்டர் – புவன்
சண்டை – பீனிக்ஸ் பிரபு
ஒளிப்பதிவு – ஜீவன்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்