கடைசி காதல் கதை விமர்சனம்

நாயகன் ஆகாஷ் பிரேம்குமார்
காதல் தோல்வியால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு, மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை அளிக்கும் மருத்துவர் சில புத்தகங்களை கொடுத்து அவரை படிக்க சொல்கிறார். அந்த புத்தகங்களை படிக்கும் ஆகாஷ் பிரேம்குமார், இனி காதல் தோல்வியால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, மனிதர்களுக்கு காதல் உணர்வு ஏற்படாமல் இருக்க தீர்வு ஒன்றை கண்டுபிடிக்கிறார்.

இதுவரை யாரும் யோசிக்காத அந்த தீர்வு வித்தியாசமாக இருந்தாலும், விபரீதமாகவும் இருக்கிறது. அப்படி ஒரு தீர்வு மூலம் உலகில் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்கும் ஆகாஷ் பிரேம்குமார் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? அதன் மூலம் நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன என்பதே ‘கடைசி காதல் கதை.’ படத்தோட மீதிக்கதை.

நடிகை-நடிகர்கள்:

ஆகாஷ் பிரேம்குமார், எனாக்ஷி கங்குலி, மைம் கோபி, சாம்ஸ், புகழ், விஜே ஆஷிக், நோபல், ஆர்கேவி, பிரியங்கா வெங்கடேஷ், அனு பிரியதர்ஷினி, மிதுன்யா, கிருத்திகா, நிசார், ஸ்வப்னா, மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : எஸ் கியூப் பிக்சர்ஸ் – இ.மோகன்
இயக்கம் – ஆர்.கே.வி
இசை – சேத்தன் கிருஷ்ணா
ஒளிப்பதிவு – சிவசுந்தர்
மக்கள் தொடர்பு – தர்மா, சுரேஷ்