தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டம்
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு SSLC தேர்வில் குறைந்த பட்சம் 90% மதிப்பெண்களும், மாணவர் ஊனமுற்றோராக இருப்பின் 75% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆகஸ்ட் 20, 2017 வரை www.vidyadhan.org என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். அவர்கள் தொடர்ந்து நல்ல மதிப்பெண்கள் பெற்றால், அவர்களது விருப்பத்திற்கு ஏற்றார் போல் உயர் கல்வி படிப்பிற்கு உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு கல்லூரி மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டம்
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு HSC தேர்வில் குறைந்த பட்சம் 90% மதிப்பெண்களும், மாணவர் ஊனமுற்றோராக இருப்பின் 75% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆகஸ்ட் 20, 2017 வரை www.vidyadhan.org என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் அவர்கள் கல்லூரி படிப்பு முடியும் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, Vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்ற மிண்ணஞ்சல் முகவரி, மற்றும் 07339659929 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.