“ஒரு சின்ன விஷயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும் மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக்கரு – பொன்ராம்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில், சத்யராஜ்-சசிகுமார் நடிப்பில் வெளிவருகிறது எம்ஜிஆர் மகன்

தனது முந்தைய திரைப்படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்றிலுமே குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் அம்சங்களை சுவாரசிய கலவையாக தந்த இயக்குநர் பொன்ராம், தனது புதிய படைப்பான எம்ஜிஆர் மகன் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், “100% பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம்” என்கிறார்.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தை பற்றி உற்சாகத்துடன் பேசும் பொன்ராம், “ஒரு சின்ன விஷயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும் மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக்கரு. தந்தையாக சத்யராஜும், மகனாக சசிகுமாரும், தாயாக சரண்யா பொன்வண்ணனும், தாய்மாமனாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ஜி ராமசமியாக சத்யராஜ் நடித்துள்ளார். அன்பளிப்பு ரவி எனும் சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். தனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஆரிடம் வரும் அனுப்பிரியா (மிருணாளினி ரவி), எம்ஜிஆர்-அன்பளிப்பு ரவி தந்தை-மகன் சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது. படம் முழுவதும் அரை டவுசரில் வரும் அக்னி எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்,” என்றார்.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 சதவீதம் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் வகையில் எம்ஜிஆர் மகன் உருவாகியுள்ளது. குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்து அம்சங்கள் நிறைந்த கலவையாக மக்களை கவரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று நம்பிக்கையோடு கூறுகிறார் பொன்ராம்.

தயாரிப்பு நிறுவனம்: ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட்

நடிகர்கள்: சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராமச்சந்திரன், நமோ நாராயணன், சூப்பர் குட் சுப்பிரமணி, நந்திதா சுவேதா (கவுரவ வேடம்)

இயக்குநர்: பொன்ராம்
ஒளிப்பதிவு: வினோத் ரத்தினசாமி
இசை: அந்தோனி தாசன்
படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்
தயாரிப்பு வடிவமைப்பு: ஜி துரை ராஜ்
சண்டை காட்சிகள்: ஸ்டண்ட் சில்வா
நடனம்: தினேஷ், பிருந்தா, தினா
பாடல்கள்: யுகபாரதி, அந்தோனி தாசன், கடல் வேந்தன், முருகன் மந்திரம்
நிர்வாக தயாரிப்பு: கே எஸ் செந்தில்குமர்-சித்தார்த் ராவ்
புகைப்படங்கள்: கோமளம் ரஞ்சித்
வடிவமைப்பு: கிளிண்டன் ரோச். எஸ்
உடைகள் வடிவமைப்பு: அஷ்வினி கிருஷ்ணா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்