சம்ஹாரம் விமர்சனம்

ராம் பிரபா இயக்கத்தில், பிரஜின் பத்மநாபன், ஷருமிஷா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் சம்ஹாரம்.

நாயகன் பிரஜின் தன்னுடைய தங்கை ஷருமிஷாவிற்கு தன்னுடைய மாமா பையனை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் தங்கை ஷருமிஷாவிற்கு அந்த திருமணத்தில் விருப்பமில்லை. 

இதனால் ஷர்மிஷா வீட்டை விட்டு வெளியே செல்வதற்காக கேட்டின் அருகே வர பிரஜின் அவரை கையும் களவுமாக பிடித்து விடுகிறார். அவரை வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டிவிடுகிறார்.

ஷர்மிஷா வீட்டின் அறையில் இருந்து கொண்டே தன்னுடைய காதலனுக்கு போன் செய்து பிரச்சனையை கூறுகிறார். அப்பொழுது தன்னுடைய அக்காவிற்கும் அம்மா பையனான இளங்கோவிற்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததால் அக்கா இறந்துவிட்டதாக கூறுகிறார்.

இன்று சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக எனக்கு அந்த இளங்கோவை திருமணம் செய்து வைக்க என் அண்ணன் முடிவு செய்து இருக்கிறார். நீ வந்து என்னைக் காப்பாற்று இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்று கூறுகிறார்.

ஷர்மிஷாவின் காதலனும் அவளைக் காப்பாற்றுவதற்காக அவருடைய வீட்டிற்குள் இரவு நேரத்தில் சென்று விடுகிறார். அந்த சமயத்தில் பிரஜினின் நண்பர் மூலம் ஒரு அப்பாவும் மகளும் அந்த வீட்டில் அடைக்கலம் கேட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஜெயிலில் இருந்து வெளிவரும்  இளங்கோவையும் பிரஜின் தன்னுடைய வீட்டில் தங்க வைக்கிறார்.

அப்பொழுது இளங்கோ தன்னை சில பேர் கொள்ள நினைப்பதாக கூறுகிறார். அதற்கு பிரஜின் நீ பயப்பட வேண்டாம் இங்கு யாரும் உன்னை கொல்ல முடியாது என்று அவரிடம் சொல்கிறார்.

ஷருமிஷாவை அவருடைய காதலன் காப்பாற்றி அழைத்து சென்றாரா? இல்லையா? பிரஜினின் வீட்டுக்குள் வந்து தங்கிய அப்பாவும் மகளும் யார்? இளங்கோவை கொல்ல நினைப்பது யார்? என்ற பல கேள்விகளுக்கான விடையே சம்ஹாரம் படத்தோட மீதி கதை. 

தொழில்நுட்பக் கலைஞர்கள் 

தயாரிப்பு : Vidhya Productions 

தயாரிப்பாளர் :  வேல் முருகன்

எழுத்து  மற்றும் இயக்கம் : ராம் பிரபா

இசை : V G ஹரி கிருஷ்ணன்

ஒளிப்பதிவு : சுரேஷ்குமார் சுந்தரம்

எடிட்டர் : ராம்நாத்

பாடலாசிரியர் :  அபிநயா

போஸ்ட் விளம்பர வடிவமைப்பு : சசி & சசி 

மக்கள் தொடர்பு : சரண்