ரவி ராகுல் நாயகனாக நடித்திருக்கும் படம் சலாம். வெளியூரிலிருந்து தனது நண்பனின் ஊரான இராமேஸ்வரத்திற்கு வருகிறார் நாயகன். அந்த ஊரில் இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மதத்தால் வேறுபட்டாலும், எல்லோரும் மச்சான், மாப்பிள்ளை, அண்ணன், தம்பி என்று அனைவரும் ஒருவருக்கொருவர் உரிமையோடு பழகி வருகிறார்கள். அந்த ஊரிலேயே தன்னுடைய நண்பன் செய்யும் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் நாயகன்.
அவர் அந்த ஊரிலேயே இருக்கப்போகிறார் என்று ஊரில் உள்ள அனைவரிடமும் சொல்லி வருகிறார் நாயகனின் நண்பன். இதனால், நாயகனையும் தங்கள் வீட்டில் உள்ள ஒரு பையன்போலவே அனைவரும் அவரை நடத்தி வருகிறார்கள். ஆனால், நாயகனோ அந்த ஊரில் நடக்கும் சில விஷேசங்களையெல்லாம் ஏதோ காரணங்களுக்காக ஒதுக்கியே வருகிறார். அதேஊரில், நாயகியை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் நாயகன். ஆனால், நாயகனை தவறாக புரிந்துகொண்ட நாயகி அவரை அடித்து விடுகிறார்.
ஒருகட்டத்தில் தன்மீது தான் தப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த நாயகிக்கு நாயகன் மீது காதல் வருகிறது. இதற்கிடையில் நாயகன் வசிக்கும் ஊருக்கும் வரும் சம்பத், நாயகனின் போட்டோவை அந்த ஊரில் உள்ள அனைவரிடமும் காட்டி அவரைப் பற்றிய விவரங்கள் கேட்கிறார். ஆனால், யாரும் நாயகனை தங்களுக்கு தெரியவில்லை என்றே சொல்கிறார்கள்.
உண்மையில் நாயகன் அந்த ஊருக்கு வரக் காரணம் என்ன? நாயகனை தேடி வரும் சம்பத் யார்? எதற்காக நாயகனை தேடுகிறார்? நாயகி தனது காதலை நாயகனிடம் சொன்னாரா? இவர்களது காதலை அந்த ஊர் மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்