‘சாமி ஸ்கொயர்’ மோஷன் போஸ்டர் சாதனை

‘சாமி ஸ்கொயர்’ மோஷன் போஸ்டர் சாதனை

சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை 15 வருடம் கழித்து தற்போது எடுத்து வருகிறார் இயக்குநர் ஹரி. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பிரபு, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு சாமி ஸ்கொயர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இந்தபடத்தின் மோஷன் போஸ்டரும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வந்தனர். இந்நிலையில் இந்த மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது. இதனை தற்போது 2 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் 71 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 

இது தான் இதுவரை அதிகம் லைக்ஸ் வாங்கிய தமிழ் மோஷன் போஸ்டராகும்.