ரைட் விமர்சனம்

சுப்பிரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண்பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்ஷரா ரெட்டி, வினோதினி, தங்கதுரை, ஆதித்யா, யுவினா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரைட்.

இன்ஸ்பெக்டராக இருக்கும் நட்டி, பிரதமர் வருவதால் பாதுகாப்பு பணிக்காக சென்று விடுகிறார். அந்த சமயத்தில் தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்கு வருகிறார் அருண்பாண்டியன். 

ரைட்டராக இருக்கும் மூன்றாவது ரமேஷ் அருண் பாண்டியனை சரியாக நடத்தாமல் அவருடைய புகாரை கசக்கி எறிந்து விடுகிறார். 

மீண்டும் மீண்டும் காவல் நிலையத்திற்கு வருகிறார் அருண்பாண்டியன் தன் மகனைப் பற்றி தெரிந்து கொள்ள. 

அந்த சமயத்தில் ஒரு லேப்டாப்பின் மூலமாக காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் காவல் நிலையத்திலிருந்து யாராவது வெளியில் சென்றால் அந்த வெடிகுண்டு தானாக வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இதனால் காவல் நிலையத்திற்கு வந்த அனைவரும் காவல் நிலையத்திற்கு உள்ளையே சிக்கி விடுகிறார்கள். காவல் நிலையத்தை அந்த மர்ம நபர் மொத்தமாக தன்னுடைய கண்ட்ரோலில் வைத்துக் கொள்கிறார். 

அந்த மர்ம நபர் சொல்வதையும் மீறி ஒரு கைதி வெளியில் செல்ல முயற்சி செய்ய அந்த மர்ம நபர் சொன்ன மாதிரியே வெடிகுண்டு வெடித்து விடுகிறது. 

அந்த மருமநபர் யார்? எதற்காக காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்? அதற்கான காரணம் என்ன? என்பதே ரைட் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : திருமால் லக்ஷ்மணன் மற்றும் சியாமளா 

இசை : குணா சுப்பிரமணியன் 

ஒளிப்பதிவு : எம் பத்மேஷ் 

இயக்கம் : சுப்பிரமணியன் ரமேஷ் குமார்

மக்கள் தொடர்பு : சதீஷ்(AIM)