மாட்டிறைச்சி விற்பதற்குத் தடை விதித்ததை எதிர்த்து, புதுவையில் தீர்மானம்

மத்திய அரசு கொண்டுவந்த பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, ஒட்டகம் இறைச்சிக்காக விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்தார் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக நிறைவேறியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிக்கையை திரும்பக் கோரி தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக மேகாலயா, கேரளா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.