இதுவரை காணாத அவதாரத்தில் பிரபாஸ்… ‘ஃபௌஜி’ டிசம்பர் 3-ல் உலகம் முழுவதும்!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியுள்ள பான் இந்திய திரைப்படமான ‘ஃபௌஜி’ (Fauzi), வரும் டிசம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் புதிய போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதிய போஸ்டரில், போர்க்களத்தில் ரத்தக்கறை படிந்த உடலுடன், காயங்களும் சோர்வும் நிறைந்த ஒரு வீரராக பிரபாஸ் தோன்றுகிறார். இதுவரை காணாத அவரது வித்தியாசமான தோற்றம் மற்றும் உணர்ச்சிகரமான வெளிப்பாடு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த போஸ்டர், படத்தின் பிரம்மாண்டம், தீவிரமான கதைக்களம் மற்றும் உணர்வுபூர்வமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரைப்படம், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளுடன் வலுவான கதையையும் கொண்டிருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.
படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி நடித்துள்ளார். மேலும் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு

இயக்கம்: ஹனு ராகவபுடி

தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

வழங்குபவர்கள்: டி-சீரிஸ்

தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய்.

ரவிசங்கர், பூஷன் குமார்

ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி

இசை: விஷால் சந்திரசேகர்

படத்தொகுப்பு: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்

மக்கள் தொடர்பு : யுவராஜ்