தமிழக முதல்வரிடம் பேச தயார்


Kalai Puli Dhanu NAIYAPUDAI

 

முதல்வர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இலங்கையின் கடல் வளங்களை தென் இந்திய பகுதியில் உள்ள மீனவர்கள் அள்ளிச்செல்கின்றனர். இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு துறை அதிகாரிகளிடம், எங்கள் கடல் பகுதிக்கு இழுவை படகுகளுடன் வரும் மீனவர்களை ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க அறிவுறுத்துமாறு தெரிவித்து இருந்தேன். ஆனால் தொடர்ந்து இலங்கை கடல் பகுதிக்கு வரும் இழுவை படகுகளால் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பாரம்பரியம் என்ற பெயரில் கடல் வளங்களை முற்றிலும் அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மீனவர்கள் 49 பேர் எங்கள் கடல் பகுதிக்கு வந்ததால் தான் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போதே அவரை சந்தித்து பேச வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அப்போது அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் தற்போது உள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஏற்பாடு செய்தால் அவரிடம் பேச தயாராக உள்ளேன்.