சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிக மோசமான அச்சுறுத்தலான பெண்கள் கடத்தலை பற்றி பேசும் படம் பட்டறை

இருண்ட பக்கங்களை திரையில் கொண்டு வரும் படைப்பாளிகள், உலகின் நடப்பு நிகழ்வுகளை சினிமாவில்  சொல்லக்கூடிய ஒரு பரந்த பார்வையை கொண்டுள்ளனர். மிகச் சிறந்த நேர்மறையான முறையில் ‘ராவான’  திரைப்படங்களை வழங்கிய,  என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, எப்போதும் திறமையாளர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார். நடிகர் ஜே.டி. சக்ரவர்த்தியை 1996ல் வெளியான அவரது ‘சத்யா’ திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இந்த படம் விருதுக்கான நடிப்பை அவரிடம் இருந்து வெளிப்படுத்தியது. அப்படிப்பட்ட ராம் கோபால் வர்மாவுடம் இருந்து பட்டறை படக்குழுவுக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. அவர் டீஸரில் வந்த கலர் ட்ரீட்மெண்ட் மற்றும் மாறுபாடுகளை பாராட்டினார்.
இந்த உற்சாகத்தை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கூறும்போது, “இது நம்ப முடியாத ஒரு தருணம், நான் அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவன். குறிப்பாக சத்யா திரைப்படம் ஒரு இயக்குனராக எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த படம். அதை பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. அவர் இந்த படத்தை பற்றி நல்ல வார்த்தைகளை கூறியதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். 
பட்டறை சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிக மோசமான அச்சுறுத்தலான பெண்கள் கடத்தலை பற்றி பேசும் படம். இயக்குனர் கே.வி.ஆனந்த் உடன் பணியாற்றிய இயக்குனர் பீட்டர் ஆல்வின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். டீஸர் பற்றிய ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்து பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது, மேலும் படக்குழுவிற்கு நேர்மறையான ஊக்கத்தை அதிகரித்துள்ளது.