அறிமுக நாயகன் மீரான், வளர்ந்துவரும் இளம் நாயகி மேகனா நடிக்கும் பழகிய நாட்கள்

இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே பக்குவப்பட்ட காதல் அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை கூறும் காதல் கதை.

ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அறிமுக நாயகன் மீரான் நடிக்க  வளர்ந்துவரும் இளம் நாயகி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், இயக்குனர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர்.

ஒளிப்பதிவு – மணிவண்ணன் –  பிலிப் விஜயக்குமார்

இசை – ஜான் A. அலெக்ஸிஸ் – ஷேக் மீரா

பாடல்கள்-கபிலன் , ராம்தேவ்

எடிட்டிங் – துர்காஸ் , நடனம் – எடிசன்

இணைத்தயாரிப்பு – மணிமேகலா கார்த்திக்கேயன்,கண்ணன்,அழகுராஜா

தயாரிப்பு – ராம்தேவ் பிக்சர்ஸ்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் –ராம்தேவ்

இப்படத்தில் சன்டைக் காட்சிகளே இல்லை. 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

காதல் ஒரு பேப்பர் போல செட்டானா பறக்கும் மேல ………….. என்ற குத்துபாடலுக்கு கதாநாயகன் மீரானுடன் செந்தில் கணேஷ் நடனமாடியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு தேனீ, சென்னை மற்றும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் 45 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகிறது.