கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சித்த பிரிவு சார்பில் நகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கமலவாசன் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம், மருத்துவர் படாங்கர் பீனா பிரவின் சந்திரா, தலைமை ஆசிரியை சுப்பாராயன், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.