புரொஜக்ட் சி – சாப்டர் 2 விமர்சனம்

கதாநாயகன் ஸ்ரீ படித்தும் சரியான வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். கிடைத்த வேலையை செய்துக்கொண்டிருப்பவருக்கு உடல்நிலை சரியில்லாத நபரை பார்த்துக்கொள்ளும் வேலை கிடைக்கிறது. அப்படி அந்த வீட்டில் தங்கி வேலை செய்யும் அவர், உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர் விஞ்ஞானி என்றும், அவர் கண்டுபிடித்த மருந்தை பல லட்சம் கொடுத்து வாங்க பலர் தயாராக இருப்பதையும் அறிந்துக்கொள்கிறார். பிறகு அந்த மருந்துகள் அனைத்தையும் கைப்பற்றி அதை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்.

இதற்கிடையே, ஸ்ரீயிடம் இருக்கும் பணத்தை அபகறிக்க, அதே வீட்டில் வீட்டு வேலை செய்யும் வசுதா கிருஷ்ணமூர்த்தி திட்டமிடுகிறார். மறுபக்கம் விஞ்ஞானியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற மருத்துவரான சாம்ஸ் திட்டமிடுகிறார். இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீ உயிருக்கு பயந்து அனைத்தையும் அவர்களிடம் கொடுக்கும் நேரத்தில், யாரும் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அது என்ன? அதன் பிறகு என்ன நடந்தது? ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ என்பதே படத்தோட மீதி கதை.

நடிகை-நடிகர்கள்:

ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, பாலாஜி வெங்கட்ராமன் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பாளர் – ஷார்க் ஃபின் ஸ்டுடியோ – ஸ்ரீ
இயக்கம் – வினோ
இசை – சிபு சுகுமாரன்
ஒளிப்பதிவு – சதிஷ் ஆனந்த்
எடிட்டர் – தினேஷ் காந்தி
மக்கள் தொடர்பு – சுரேஷ், தர்மா