ரியோ ராஜுடன் ஜோடி சேரும் ரம்யா நம்பீசன்

அறிமுகமான முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்புக்காக வெகுவாக பாராட்டப்பட்ட ரியோ ராஜ், இப்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருக்கின்றனர். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் கூறியதாவது…

பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் என்ற எங்கள் நிறுவனம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தரவேண்டும் என்ற குறிக்கோளுடன் துவக்கப்பட்டதாகும். எங்களுடைய நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஏ.சி.கருணாமூர்த்தி எழுதிய கதையும், அதற்கு பத்ரி வெங்கடேஷ் கொடுத்திருக்கும் திரைவடிவமும் அமைந்து விட்டது. மேலும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் அறிமுகமானபோதே அனைத்து தரப்பு ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்ற ரியோ ராஜ், இந்தப் படத்தில் இருப்பது இன்னும் சிறப்பானது. இப்படம் முழுக்க முழுக்க பொழுது போக்குப் படம் என்றாலும், துவக்கம் முதல் இறுதிவரை ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கையில் அமர வைப்பத்திருப்பது போன்ற காட்சிகள் இருக்கும்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான எல்.சிந்தன் தெரிவித்ததாவது…
அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து படப்படிப்பை துவக்கி முழு வேகத்தில் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கதாநாயகி வேடம் மிகவும் வலுவானது என்பதால், பல நடிகைகளைப் பரிசீலித்தோம். இறுதியில் ரம்யா நம்பீசன்தான் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பதுடன், அந்தப் பாத்திரப்படைப்பை நியாயப்படுத்தும் விதத்தில் நடிப்பார் என்ற முடிவுக்கு வந்தோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக யுவன் சங்கர் ராஜா எங்கள் படத்துக்கு இசையமைப்பது படத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி விட்டது

படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகையர் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சாம் ஆர்.டி.எக்ஸ். படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.கே.வசனம் எழுத, ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். கலை இயக்குநராக சரவணன் பொறுப்பேற்க, மக்கள் தொடர்பு பணிகளை சுரேஷ் சந்திரா-ரேகா டி.ஒன் கவனிக்கின்றனர்.

தயாரிப்பாளர்கள் – ராஜேஷ் குமார் & L.சிந்தன்

திரைக்கதை மற்றும் இயக்கம் – பத்ரி வெங்கடேஷ்.

இசை அமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவாளர் – B.ராஜசேகர்

படத்தொகுப்பாளர் – சாம் RDX

கதை – A.C.கருணமூர்த்தி

வசனம் – R.K.

ஸ்டண்ட் – ஸ்டன்னர் சாம்

கலை – சரவணன்