ஹலிதா ஷமீம் எழுதி இயக்கும் ஒரு ‘நியோ ரியலிஸ்டிக் காமெடி படம் ‘ஏலே’

YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் அவர்களின் அடுத்த திரைப்படம் ‘ஏலே’. Wall Watcher Films தயாரிப்பு.

சமுத்திரகனி, மணிகண்டன் மற்றும் பலர் நடிக்க, ஹலிதா ஷமீம் எழுதி இயக்கும் ஒரு ‘நியோ ரியலிஸ்டிக் காமெடி படம் தான் ‘ஏலே’. எஸ்.சசிகாந்த் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணிபுரிகிறார்கள்.

இது குறித்து தயாரிப்பாளர் YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சசிகாந்த் கூறும்போது, &கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களை கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணிபுரிய சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அப்போது தான், சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்களை கண்டறிந்து அவற்றை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல முடியும். ‘வால்வாட்சர் ஃபிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ள இயக்குனர்கள் புஷ்கர் & காயத்ரி இந்த முயற்சியில் எங்களுடன் கைகோர்க்க முன்வந்திருக்கின்றனர். ஏலே என்ற இந்த படத்தில் நாங்கள் இணைந்து பணிபுரிகிறோம்& என்றார்.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிபாசிஷ் சர்கார் கூறும்போது, &இந்த மாதிரியான நல்ல கதைகளை கண்டுபிடித்தல், அதை தாங்குதல் மற்றும் தயாரித்தல் என்ற இந்த ஒருங்கிணைந்த  மாதிரி, தமிழ் சினிமாவுக்கு ஒப்பீட்டளவில் மிகவும் புதியது. இது படைப்பாளிகளுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் உற்சாகமான தருணம்& என்றார்.

புஷ்கர் & காயத்ரி கூறும்போது, &பெரிய திரையில் நாம் விரும்பும் கதைகளை கொண்டு வரும் கனவு எங்களுக்குள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது ஹலிதா ஷமீம் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. எனவே, எஸ்.சசிகாந்த் இந்த மாதிரியான ஒரு யோசனையை கொண்டு வந்தபோது, ​​நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க உடனே ஒப்புக் கொண்டோம்& என்றனர்.

இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, &பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய, இப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் &ஏலே& படத்தை நான் இயக்குவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வழிக் காட்டிகள்,புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் எனது கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இருப்பது மேலும் மகிழ்ச்சி. இந்த மாதிரி கதையம்சம் உள்ள திரைப்படங்களை வழங்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கும் YNOT ஸ்டுடியோஸ் சசிகாந்த்திற்கு ஒரு பெரிய நன்றி& என்றார்.

மே 3ஆம் தேதி பழனியில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும்.

நடிகர்கள்: சமுத்திரகனி, மணிகண்டன் மற்றும் பலர்.

எழுத்து, இயக்கம்: ஹலிதா ஷமீம்

தயாரிப்பாளர்: எஸ்.சசிகாந்த்

இணை தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: புஷ்கர் & காயத்ரி

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

கலை இயக்குனர்: வினோத் ராஜ்குமார்

இசையமைப்பாளர்: கேபர் வாசுகி.

படத்தொகுப்பு: ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா

விளம்பர வடிவமைப்பு: கபிலன்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D’One)