சமீபத்தில், கர்நாடக மாநிலம், பெங்களூரு பிரஸ் கிளப்பில், நடிகர் பிரகாஷ் ராஜ், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
“கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து பிரதமர் மவுனம் சாதிப்பது பற்றி நான் கேள்வி எழுப்பினேன். நாட்டு குடிமகனாக, ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளேன். இதற்கு, சமூக வலைதளங்களில், என் மீது தவறான கருத்து பதிவு செய்துள்ள மைசூரு, எம்.பி., பிரதாப் சிம்ஹா மீது, மான நஷ்ட வழக்கு தொடர்ந்து, நோட்டீஸ்’ அனுப்பியுள்ளேன். அவர் கருத்தால், என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்காவிட்டால், கிரிமினல் வழக்கு தொடருவேன்” என்று கூறியுள்ளார். மேலும், “என்னை விமர்சித்த அவர், உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அரசுக்கு எதிராக பேசினால், என் தாய் மற்றும் மதம் குறித்து பேசுகின்றனர். பிரதாப் சிம்ஹாவுக்கு புத்திர சோகம் என்னவென்று தெரியவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.