மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் இன்று துவங்கின. நேற்று முன் தினம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் இன்று நினைவு இல்ல மாற்றத்திற்கான பணிகளை அரசு அதிகாரிகள் துவங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இந்த இல்லத்தில் அவரது தோழியான சசிகலா வசித்து வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை அடுத்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேதா நிலையம் இல்லத்தை பராமரித்து வருகிறார்.