‘பொதுவாக எம்மனசு தங்கம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் – நிவேதா பெத்துராஜ் இணைந்து தளபதி பிரபு இயக்கத்தில் நடித்திருக்கும்  படம் `பொதுவாக எம்மனசு தங்கம்’.  இப்படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  உதயநிதி முதல்முறையாக கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார். உதயநிதி நண்பனாக சூரியும், மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர், ரமா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.  முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

அதனை உணர்த்தும் வகையிலும், இளைஞர்கள் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்லாமல் தனது ஊரிலேயே அனைத்து வித தேவைகளையும் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளுடன் தணிக்கைக் குழுவில் `யு’ சான்றிதழை பெற்றுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் வெளியாக இருக்கிறது.