ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் “#பேய் பசி”

ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘#பேய் பசி’. இந்த படத்தை ‘Rise East Entertainment Private Limited’ நிறுவனம் சார்பில்  Sreenidhi Sagar தயாரித்துள்ளார். 
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு ஒரு வித்தியாசமான, அனைவரையும் உடனே கவரும் குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிக பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர். நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவை தரும் விஜய் சேதுபதி ‘#பேய் பசி’ படத்தின் இந்த பாடலிற்காக பாடகராக மாறியுள்ளார். வசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து மிகப்பெரிய வெற்றியை பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்த கிளப் பாடலை தனது அதே வசீகர பணியில் பாடி  அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது. டோனி சான் ஒளிப்பதிவில், ஆடை வடிவமைப்பில் தேசிய விருதை பெற்ற பூர்ணிமா ராமசாமியின் ஆடை வடிவமைப்பில், மோகன் முருகதாஸின் படத்தொகுப்பில்  மதனின் கலை இயக்கத்தில் ‘#பேய் பசி’ உருவாகிவருகிறது.