காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படம் “பதுங்கி பாயனும் தல”

மீடியா பேஷன் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் ஆமீனா ஹுசைன் தயாரிக்கும் புதிய படம் “பதுங்கி பாயனும் தல” இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கிறது. படத்தின் அறிமுக இயக்குனர் S.P.மோசஸ் முத்துப்பாண்டி அவர்கள் இயக்குனர் S.A.சந்திரசேகர் அவர்களிடம் இணை இயக்குனராகவும் இயக்குனர் சீமான் அவர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் .இந்த படத்தில் பர்மா மைக்கேல் நாயகனாக
நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க, சிங்கப்பூர் தீபன், ராகுல் தாத்தா, சிங்கம்புலி, மூவரும் காமெடியில் கலக்க, RNR மனோகர், M.S.பாஸ்கர் இருவரும் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். 

இந்த படத்தின் மொத்த செட்யூல் 53 நாட்கள் ,ஆனால் 45 நாட்களில் படத்தை முடித்து
தயாரிப்பாளரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் S.P.மோசஸ்முத்துப்பாண்டி குழந்தைகள்,  குடும்பத்தோடு அமர்ந்து வயிறு குலுங்க சிரித்து ரசிக்கும்படியாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு தணிக்கைக்குழு எந்த வெட்டும் கொடுக்காமல் “U” சான்றிதழ்
வழங்கி பாராட்டி இருக்கிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தின் “மாமனா மச்சானா” என்கிற பாடலை இயக்குனர் S.P.மோசஸ் முத்துப்பாண்டி எழுத, அந்தோணிதாசன் பாடியுள்ளார். இதன் சிங்கள் டிராக் பாடலை நடிகர் “விஜய் சேதுபதி” வெளியிட்டு படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்த பாடல் Facebook-இல் பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்து குட்டிச்சாதனை படைத்திருக்கிறது .படத்தின் அனைத்து பாடல்களும், டிரைலரும் அருமையாக இருந்ததாக, இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பாடலை S.A.சந்திரசேகர் வெளியிட T.ராஜேந்தர் , கயல் சந்திரன் மற்றும் தல படங்களின் கேமராமேன் வெற்றி பெற்று கொண்டனர். ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவில், வல்லவன் சந்திரசேகர் இசையில், மனோஜ் படத்தொகுப்பில் விரைவில் திரையில் அனைவரையும் சிரிக்க வைக்க வருகிறார் “பதுங்கி பாயனும் தல”.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் :

நடிகர்கள்

ஹீரோ – மைக்கேல்
ஹீரோயின் – நைனிகா
வேல ராமமூர்த்தி
M.S.பாஸ்கர்
சிங்கம்புலி
R.N.R.மனோகர்
சிங்கப்பூர் தீபன்
ராகுல் தாத்தா
ஹலோ கந்தசாமி

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் – S.P.மோசஸ் முத்துப்பாண்டி
ஒளிப்பதிவு – K.A.ரோவின் பாஸ்கர்
இசை – வல்லவன் சந்திரசேகர்
படத்தொகுப்பு – D.மனோஜ்
பாடலாசிரியர் – ஞானகரவேல்
நடன இயக்குனர்கள் – நோபல் ,பாபா பாஸ்கர் ,பேபி ஆன்டனி,கேசவ்
சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம்
கலை இயக்குனர் – ரவீஷ்
டிசைன் – சிந்து கிராபிக்ஸ்
மக்கள் தொடர்பு – வின்சன் C.M