இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தீவிரவாதியை பாகிஸ்தான் அரசு தேசிய தலைவராக அங்கீகரித்துள்ளது.

சமீபத்தில் தனது 70வது சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கொண்டாடியது. அதனை முன்னிட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு புகைப்பட கண்காட்சி ரயிலை பாகிஸ்தான் அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 12ஆம் தேதி இஸ்லாமாபாத் ரயில்வே நிலையத்தில் இருந்து தனது பயணத்தை இந்த ரயில் துவங்கியது.
 
பாகிஸ்தான் தகவல்தொடர்பு துறை அமைச்சர் இதனை கொடியசைத்து துவங்கி வைத்தார்.  இந்த ரயிலில் 5 ஆர்ட் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுதந்திரா போராட்டத்தில் பங்கு பெற்ற முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றள்ளன. இதில், கடந்த ஆண்டு இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல்முஜாகுதீன் தீவிரவாதி புர்ஹான் வானியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் தான் இந்த தீவிரவாத அமைப்பை, சர்வதேச தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.

மேலும் இந்த ரயிலில் காஷ்மீர் மாநிலத்திற்கென ஒரு தனி பெட்டியே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியின் வெளிப்புறத்தில் காஷ்மீரை “காப்பாற்றுங்கள்; மனிதத்தை காப்பாற்றுங்கள்”, “தைரியமான காஷ்மீரிகளே நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் 25ஆம் தேதி லாஹூரில் தனது பயணத்தை இந்த ரயிலானது நிறைவு செய்ய உள்ளது.