தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஒரு நடிகையின் பேச்சுக்கு தமிழகத்தில் பெரும் கண்டனத்தை பெற்று தந்தது என்பது அனைவரும் அறிந்ததேஅந்த பரபரப்பு ஓய்ந்த பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவரும் விதமாக செயல்பட்டவர் நடிகர் ஓவியா அவருக்கு சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டே இருப்பது ஒருபக்கம் இருந்தாலும், ஓவியா வெளியேற்றியே தீரவேண்டும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள மற்றவர்கள் செய்யும் சூழ்ச்சி தமிழகத்தில் ஓவியாமீது உள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து விட்டது.இந்நிலையில் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக சமூக ஊடங்களில் செய்திகள் பரவ தொடங்கியது. இதில் ஓவியா வெளியேறியதால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கம்மாட்டோம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான் என்றும் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசிவருவதாகவும் கூறியுள்ளார்.