கொஞ்சம்கூட ஓவியா மாறவில்லை – சிவகார்த்திகேயன்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஓவியா, தன்னுடைய விளையாட்டுத்தனம் மற்றும் வெளிப்படைத்தன்மையால் அணைவரையும் கவர்ந்து வருகிறார். தினமும் அவருக்கான ஆதரவு பெருகி வருகிறது. ‘ஓவியா ஆர்மி’, ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ என்ற வாசகங்களை டி-ஷர்ட்டில் அச்சிட்டு விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர்.  இச்சமயத்தில், சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய முதல் படத்தின் நாயகியான ஓவியா பற்றி கேட்டபோது, “ஓவியா கொஞ்சம்கூட மாறவில்லை. என்னுடன் நடிக்கும்போது இருந்த விளையாட்டுத்தனமும், குறும்பும் இப்போதும் தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.