ஒரு நொடி விமர்சனம்

மதுரை அழகர் மூவீஸ் மற்றும் வைட் லாம்ப் பிக்சர்ஸ் – அழகர் G & K.G. ரத்தீஷ் தயாரிப்பில், B.மணிவர்மன் இயக்கத்தில், தமன் குமார், MS பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, நிகிதா, விக்னேஷ் ஆதித்யா, தீபா ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “ஒரு நொடி”.

எம்.எஸ். பாஸ்கர் மதுரையில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். தன் மகளின் திருமணத்திருக்காக, வேல ராமமூர்த்தியிடம் கடன் வாங்குகிறார்.

வாங்கிய கடனை திரும்ப கொடுக்கப் போகும் நேரத்தில் காணாமல் போய் விடுகிறார்.

இதனால், எம்.எஸ். பாஸ்கரின் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்துறையில் புகார் கொடுக்கிறார். அந்த வழக்கை இன்ஸ்பெக்டரான தமன்குமார் விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

இதே சமயத்தில், அதே ஏரியாவில் இளம் பெண்ணான நிகிதா மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

இந்த இரண்டு வழக்குகளையும் இன்ஸ்பெக்டர் தமன்குமாரே விசாரிக்க.. பல அதிர்ச்சியான தகவல்கள் தெரிய வருகிறது.

நிகிதாவை கொலை செய்தது யார்?
எம்.எஸ்.பாஸ்கர் காணாமல் போனது எப்படி? எதனால்? என்பது எதிர்பாராத திருப்பம் அது என்ன என்பதே ஒரு நொடி படத்தோட கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் : பி. மணிவர்மன்

ஒளிப்பதிவு : கே. ஜி. ரத்தீஷ்

படத்தொகுப்பு : எஸ். குரு சூர்யா

இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம்

கலை இயக்குனர் : எஸ்.ஜே. ராம்

பாடலாசிரியர்கள் : சிவசங்கர் / ஜெகன் கவிராஜ் / உதயா அன்பழகன்

சண்டை பயிற்சி : மிராக்கள் மைக்கில்

தயாரிப்பு நிறுவனம் : மதுரை அழகர் மூவிஸ் & ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள் : அழகர்.ஜி & கே.ஜி. ரத்தீஷ்

வழங்குபவர் : ஜி. தனஞ்ஜெயன்
(கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்நெர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்)

மக்கள் தொடர்பு : P. ஸ்ரீ வெங்கடேஷ்