நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்ன? காம உணர்ச்சியே. அதனை தடுக்க ஒரே வழி பெண்கள் மீதான கவர்ச்சியை, காமத்தை மக்கள் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைப்பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். அப்போது தான் காமத்திற்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று கதையை தொடங்குகிறார் வேலுபிரபாகரன். இந்த கருத்துக்கள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் நிதர்சனம் என்று தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொடர்கிறார்.
படத்தில் தனது கதையை ஒரு திரைப்படமாக எடுக்கும் வேலு பிரபாகரன், அவரது இளமை பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்து, அவள் தான் தனது உயிர் என்று, அந்த பெண் மீது தனது முழு அன்பையும் செலுத்துகிறார். அந்த பெண்ணுடன் உறவும் வைத்துக் கொள்கிறார். படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அவர், தனது பட வேலைகளுக்காக சென்னைக்கு செல்ல, சில நாட்களில் வேலுபிரபாகரனுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அதாவது, அவர் காதலித்து வந்த அந்த பெண்ணுக்கு மற்றொரு ஆணுடன் திருமணமாகிவிட்டதாக செய்தி வர அவளை பார்க்க செல்லும் வேலு பிரபாகரன், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்.
இதையடுத்து எந்த பெண்ணையும் திருமணம் செய்யக் கூடாது என்ற முடிவில் இருக்கும், அவரது வாழ்க்கையில், நடிகை விஜயா என்ற கதாபாத்திரத்தில் பொன்சுவாதி வருகிறார். பரதநாட்டியத்தில் ஈடுபாடுடன் இருக்கும் விஜயா, ஏற்கனவே அவரது ஆசிரியருடன் திருமணமாகாமல் தொடர்பில் இருக்கிறாள். இருந்தாலும் அவள் மீதான ஈர்ப்பின் காரணமாக விஜயாவை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் விஜயா குறித்து சிலர் அவரிடம் தவறாக பேச, விஜாயாவை விட்டு பிரியும் வேலுபிரபாகரன், பின்னர் விஜயாவின் அண்ணன் மகளை திருமணம் செய்து கொண்டு அவளிடமிருந்தும் பிரிந்து விடுகிறார்.
இதிலிருந்து காதல், பெண் என்று மூடிவைக்கப்படும் காமம், கவர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது கருத்தை சொல்கிறார். அவரது உண்மை வாழ்க்கையிலும் பொன் சுவாதி மீது காதல் கொள்ளும் வேலு பிரபாகரன் அடுத்ததாக அவரது வாழ்க்கையில் என்ன செய்தார்? பொன் சுவாதியுடனேயே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா? அவரது வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்