வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம்

2017 – 2018 நிதி ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு திங்கள் கிழமை கடைசி நாள் ஆகும். வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்வதற்கு வசதியாக விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் வருமான வரி அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 30க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், காலை 9.15 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஏராளமானோர் படிவம் மூலமாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்தனர்.