சென்னை: இந்தியாவின் முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஒனிடா எலக்ட்ரானிக்ஸ், ‘ஒனிடா ரீவைர்டு’ என்ற புதிய வளர்ச்சி திட்டத்தை அறிவித்து, தனது புதிய 100-அங்குல QD Mini LED பிரீமியம் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வளர்ச்சி திட்டத்தின் மூலம் பிரீமியம் தயாரிப்புகள், புதுமையான தொழில்நுட்பம், மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை மற்றும் நாடு முழுவதும் வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
அடுத்த 2–3 ஆண்டுகளில் 100 புதிய ஷோரூம்கள், அடுத்த 12 மாதங்களில் 400-க்கும் மேற்பட்ட சேவை கூட்டாளர்கள் மூலம் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் ஒனிடா திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் தமிழ்நாடு, நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சி சந்தைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
100-அங்குல QD Mini LED டிவியின் முக்கிய அம்சங்கள்:
100-இன்ச் QD Mini LED திரை
1,600 Full Array Local Dimming Zones
144Hz Refresh Rate
Dolby Vision, HDR10, MEMC
Pentonic Processor
1000W PMPO Dolby Atmos Audio
Gaming Mode வசதி
இந்த டிவி, ஹோம் தியேட்டர், பிரீமியம் வீடுகள் மற்றும் கேமிங் ஆர்வலர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒனிடா நிர்வாகம் கூறுகையில், உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தை இந்திய நுகர்வோருக்கு வழங்குவதோடு, பிரீமியம் எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் தனது முன்னணியை மேலும் வலுப்படுத்துவதே இந்த புதிய வளர்ச்சி திட்டத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளது.

