காமெடி நடிகர் மீது, அவரது மனைவி போலீசில் புகார்

பிரபல காமெடி நடிகர், கொடுமை செய்வதாக, அவரது மனைவி புகார் செய்துள்ளார். மாதவரம் சாஸ்திரி நகர், 2வது அவென்யூவைச் சேர்ந்தவர், பாலாஜி, 43; காமெடி நடிகர். தற்போது பிரபல ‘டிவி’ நிகழ்ச்சியில், நடுவராக இருந்து வருகிறார்.அவரது மனைவி நித்யா, 30. இருவரும், எட்டு ஆண்டு களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு போர்ஷிகா, 6, என்ற பெண் இருக்கிறார்.

கருத்து வேறுபாடு காரணமாக, சில மாதங்களாக, இருவருக்கும் இடையே பிரச்னை அதிகரித்துள்ளது. பிரபல ‘டிவி’யின் நடன நிகழ்ச்சியிலும் இது வெளிப்பட்டது. அப்போது அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.  இந்நிலையில் நித்யா, மாதவரம் போலீசில் நேற்று, கணவர் பாலாஜி மீது புகார் செய்தார். அதில், தன் சமுதாயத்தை பற்றி தரக்குறைவாக பேசி, தன்னை கொடுமை செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.