எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து திமுக உறுப்பினர் பொன் முடி கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றும். எய்ம்ஸ் அமைக்க சாதகமான சூழலில் தஞ்சை செங்கிப்பட்டி இருந்ததினால் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு பரிந்துரைத்த இடத்தை மத்திய குழு நிராகரித்து விட்டதாகவும், இருப்பினும் 5 இடங்களில் ஏதாவது ஒன்றில் எய்ம்ஸ் அமைக்க வலியுறுத்தியுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.