இரட்டை இலைச்சின்னம் வரும் திங்கள் கிழமை எங்களுக்கு கிடைக்கும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் அருகே அதிமுக நகர கழகம் சார்பில் அதிமுக 46ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், ஒன்றிய அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் செண்பகமூர்த்தி, சந்திரசேகர், முன்னாள் நகர்மன்ற துணைதலைவர் ரத்தினவேல், ஜெமினி(எ) அருணாச்சலசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு இலவச சேலை, வேஷ்டிகளை வழங்கி பேசுகையில் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பல கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு காணமால் போய் விட்டது.

ஆனால் அதிமுக என்றைக்கும் நிலைத்து இருக்கும், கடந்த 2011 தேர்தில் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்ற காட்டினர். மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற தரகமந்திரத்தினை கொண்டு 2016தேர்தலில் எந்த கட்சி கூட்டணி இல்லமால் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, அதிமுகவை ஆட்சி கட்டியலில் அமர வைத்த பெருமை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சாரும், நான் இல்லாவிட்டாலும் இந்த கட்சி 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்று சட்டசபையில் தெரிவித்தார்.

இன்று அவர் மறைந்தாலும், அவரது வழியில் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுகவிற்கு சோதனை வருவது வழக்கம், அதைபோன்று தான் தற்போது சோதனை வந்தது. ஆனால் அதில் இருந்து மீண்டு விட்டோம் வரும் திங்கள் கிழமை இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கு கிடைக்கும், முதல்வர், துணை முதல்வர் இணைந்து தேர்தல் ஆணையத்தில் பிரமணபத்திரம் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். வரும் 23 ஆம் தேதி எங்களுக்கு இரட்டை இலைகிடைக்கும், எங்கள் சின்னம் முடக்கப்பட்டு மீட்ட வரலாறும் உண்டு, அதை வரலாறு தான் தற்போது திரும்புகிறது. பெரும்பலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் எங்களுக்கு ஆதரவாக பிரமணபத்திரம் தாக்கல் செய்துள்ளதால் உறுதியாக எங்களுக்கு கிடைக்கும், மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெறுவோம், கட்சியின் 50வது ஆண்டு பொன்விழா வரும் போதும் அதிமுக ஆட்சியில் இருக்கும், அடுத்த மாதம் தூத்துக்குடியில் நடைபெறும் எம்.ஜீ.ஆர். நூற்றாண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

குறிப்பாக தூத்துக்குடி 4வது குடிநீர் திட்டம் மற்றும் கோவில்பட்டி 2வது குடிநீர் திட்டங்கைள மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், மேலும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளதகவும், மாநில மாநாடு போன்று விழாவினை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பன், தலைமை கழக பேச்சாளர் நீலகண்டன், ரமேஸ், அல்லிக்கண்ணன், வெள்ளத்துரை, அலங்காரபாண்டியன், குருநாதன், செல்லையா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், சௌந்தர்ராஜன், மா.த.மூர்த்தி,பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் நகர இளைஞர் பாசறை துணை தலைவர் முருகேசன்,இளைஞர் பாசறை செயலாளர் மகாராஜன் ஆகியோர் நன்ற கூறினர். இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் விஜயபாண்டியன் செய்து இருந்தார்.