புதிய அப்டேட்டில் பழையபடி ஸ்டேட்டஸ் மாற்றலாம்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் புதிய அப்டேட் மூலம் புகைப்படம், வீடியோ ஜிஃப் பைல்களை வைக்கும் வசதி வழங்கப்பட்டது. பழைய ஸ்டேட்டஸ் ஆப்ஷனில் வார்த்தைகளை டைப் செய்து கொள்வது, எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப் வழங்கிய புதிய அப்டேட் அதன் பனாளிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.  புதிய அப்டேட் ஸ்நாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய அப்டேட் பலரும் பிடிக்காததை அறிந்து வாட்ஸ்அப் மீண்டும் பழைய ஸ்டேட்ஸ் வசதியை வழங்க திட்டமிட்டுள்ளது. எனினும் தானாக மறையும் புதிய ஸ்டேட்டஸ் அம்சத்தினை வாட்ஸ்அப் திரும்ப பெறாது.  வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பின் செட்டிங்ஸ்-இல் ‘Info’ என்ற வசதி வழங்கப்படுகிறது.

இதனை கிளிக் செய்ததும் பழைய ஸ்டேட்டஸ் வசதி ‘Info’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இதே போல் ப்ரோஃபைல் பகுதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ப்ரோஃபைல் ஆப்ஷனில் ‘Info’ மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியினை ‘Tagline’ என மாற்றியதாக தகவல் வெளியானது. மேலும் ஏற்கனவே கூறப்பட்டதை போன்று revoke வசதியும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்சமயம் revoke வசதியினை unsend என மாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.