2013 ஆம் ஆண்டு கர்நாடகமாநிலத்தில் இருந்து மாநிலங்களை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் வர்த்தக துறை இணை அமைச்சராக பதவிவகித்தார். சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்ற நிர்மலா சீதாராமனுக்கு நாட்டின் மிகமுக்கிய துறையான பாதுகாப்பு துறை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று முறைப்படி பாதுகாப்பு துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதிவியேற்றுக்கொண்டார். அப்போது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். மதுரையில் 1959 ஆண்டு பிறந்த இவர் 2006 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தன்னை இணைத்துக்கொண்டார். இவருக்கு 2010 ஆண்டு பாரதி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருந்துள்ளார். அதை தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் இணைந்தார்.